பரமக்குடியில் நாளை இரவு 12:00 மணிக்கு அழகர் ஆற்றில் இறங்குகிறார்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2024 09:04
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் நாளை இரவு அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. இதனையொட்டி கோயில் உட்பட ஆறு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரை அழகர் கோவிலுக்கு அடுத்து பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடக்கிறது. இதன்படி ஏப்.18 பெருமாளுக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மூன்று நாட்களாக பெருமாள் யாகசாலை முன்பு ஏகாந்த சேவையில் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் விசேஷ தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு ஆடி வீதியில் வலம் வருகிறார். நாளை காலை யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு அபிஷேகம் நடக்கிறது தொடர்ந்து இரவு 12:00 மணிக்கு மேல் கள்ளழகர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி வைகையில் இறங்க உள்ளார். இதனையொட்டி கோயில் மற்றும் வைகை ஆறு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. தொடர்ந்து சாமியாடிகள் நகர் முழுவதும் வலம் வந்து விழாவை சிறப்பித்து வருகின்றனர்.