Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி சித்திரைத் திருவிழாவில் ... சித்ரா பவுர்ணமி; அருட்கோட்டம் முருகன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் சித்ரா பவுர்ணமி; அருட்கோட்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலையில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலையில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2024
05:04

தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலைத்தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்து வருகின்றனர். இந்தாண்டு, கடந்த பிப்ரவரி 12ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்தனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலையேறி ஈசனை தரிசித்து வந்தனர். இந்நிலையில், சித்ரா பவுர்ணமி தினத்தையொட்டி, நேற்று இரவு முதலே, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறினர். இந்நிலையில், சித்ரா பவுர்ணமி தினமான இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையில் குவிந்தனர். வனத்துறையினரின் சோதனைக்கு பின், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சித்ரா பவுர்ணமியையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு சக்கர வாகனங்களை தண்ணீர் பந்தல் பிரிவிலேயே தடுத்து நிறுத்தியதால், பூண்டி கோவிலுக்கு செல்லும் வழியில் வாகனங்கள் நிறுத்துவது தவிர்க்கப்பட்டது. பூண்டி அடிவாரம் முழுவதும் பக்தர்களால் நிறைந்தது. வழியெங்கிலும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar