பதிவு செய்த நாள்
23
ஏப்
2024
05:04
பழநி; பழநியில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு லட்சுமி நாராயண பெருமாள் தேரில் எழுந்தருளினார்.
பழநி, முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.15-ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் சிம்ம வாகனம், சேஷ வாகனம், மரசப்பரம், அனுமார் வாகனம், தங்க குதிரை வாகனங்களில் வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஏப்.,21 ல் திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. ஏப்.23ல் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் புதிய தேரில் சுவாமி எழுந்தருளினார். காலையில் தேரோட்டம் ரதவீதியில் நடந்தது. கோயில் யானை கஸ்தூரி தேரின் முன்பு நடந்து சென்றது. நாளை (ஏப்.,24) பத்து நாட்கள் சித்திரை திருவிழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெற உள்ளது. தேரோட்ட நிகழ்ச்சியில் கோயில் துணை ஆணையர் வெங்கடேஷ், கந்த விலாஸ் விபூதி ஸ்டோர் செல்வகுமார், நவீன் விஷ்ணு, நரேஷ் குமரன், அடிவாரம் வர்த்தகர் சங்க தலைவர் சந்திரசேகர், சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், பழநி கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.