Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோயிலில் கேரளா ... உத்தரகோசமங்கை பெருமாள் கோயிலில் மண்வெட்டியால் சாதம் கிளறி பக்தர்களுக்கு அன்னதானம் உத்தரகோசமங்கை பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்ய கேரளா வருகிறது பிரமாண்ட காளி சிலை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பவுர்ணமிகாவு கோவிலில் பிரதிஷ்டை செய்ய கேரளா வருகிறது பிரமாண்ட காளி சிலை!

பதிவு செய்த நாள்

28 ஏப்
2024
08:04

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் ஒற்றை பளிங்கு கல்லில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட 18.5 அடி உயர காளி சிலையை, கேரளாவுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பளிங்கு கற்களுக்கு பெயர் பெற்ற, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சாமி சிலைகள் செய்து அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இங்குள்ள முகேஷ் பரத்வாஜ் என்ற சிற்பி, 18.5 அடி உயர காளி சிலையை பிரமாண்டமாக வடிவமைத்துள்ளார். ஒரே பளிங்கு கல்லில் உருவாக்கப்பட்ட இந்த சிலை, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பவுர்ணமிகாவு கோவிலுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. 50 டன் எடையில் உருவாக்கப்பட்ட இந்த காளி சிலையுடன், 12 அடி உயர துர்கா மற்றும் ராஜ மாதங்கி தேவி சிலைகளும் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த சிலைகளுடன் அவற்றிற்கான வாகனங்களான அன்னப்பறவை, சிங்கம், புலி, மயில் ஆகியவையும் தயார் செய்யப்பட்டுள்ளன. சிலைகள் முழுமை பெற்றதை அடுத்து, அதற்கான பூஜைகள் நேற்று வெகுவிமரிசையாக நடந்தன. இதையடுத்து, அவற்றை எடுத்துச் செல்வதற்கான லாரிகளில் சிலைகளை ஏற்றும் பணிகள் நடந்தன. சிலைகளுடன் இன்று புறப்படும் லாரி, விரைவில் கேரளா வந்தடையும். உலகின் மிகப்பெரிய பஞ்சமுகி கணேச சிலை, 51 அக் ஷர தேவதைகள் உள்ள திருவனந்தபுரம் பவுர்ணமிகாவு கோவிலில் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar