ஆண்டிபட்டி; வருஷநாடு அருகே காந்திகிராமம் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது. இரு நாட்கள் நடந்த விழாவில் பக்தர்கள் சக்தி கிடா வெட்டுதல் நிகழ்ச்சியுடன் அம்மனுக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். பக்தர்கள் சார்பில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மலைக் கிராமங்களில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா எடுப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.