Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் பூமாயி அம்மனுக்கு ... காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஷியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா காஞ்சிபுரம் சங்கர மடத்தில் ஷியாமா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரைலோக்கியநாதர் கோவிலில் மஹாவீரர் ஜெயந்தி விழா விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திரைலோக்கியநாதர் கோவிலில் மஹாவீரர் ஜெயந்தி விழா விமரிசை

பதிவு செய்த நாள்

07 மே
2024
01:05

காஞ்சிபுரம் : ஜின காஞ்சி என அழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றத்தில், சமணர் தலமான திரைலோக்கியநாதர் மற்றும் சந்திரபிரபநாதர் பகவான் ஜினாலயம் என அழைக்கப்படும், சமணர் கோவில் உள்ளது.

சமணர்களின் அடையாளமாக திகழும் பழமையான இக்கோவில்கள், தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சமணர்கள் பலர் தினமும் வழிபட்டு செல்கின்றனர். பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில், மேல்சித்தாமூர் ஜினகாஞ்சி மடம் மற்றும் திருமலை அரகந்தகிரி திகம்பர ஜெயின் மடத்தின் மடாதிபதிகளின் அருளாசியுடன் மஹாவீரர் ஜெயந்தி விழா மற்றும் பகவானின் ஜினகாஞ்சி வீதியுலா நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவையொட்டி, மாலை 4:00 மணிக்கு மண்டகபடி மற்றும் சிறப்பு ஆராதனையும், தொடர்ந்து கோவிலில் இருந்து பகவானின் ஜின காஞ்சி திருவீதியுலா இரவு 7:30 மணிக்கு துவங்கியது. இதில், தர்மதேவி கோலாட்ட குழுவினர் கோலாட்டம் ஆடியபடி முன்னே செல்ல, மலர்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய மஹாவீரர், திருப்பருத்திக்குன்றம் மாட வீதி, கலெக்ட்ரேட் வழியாக மேட்டுத்தெரு ஜினாலயம், காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், காவலான்கேட், வந்தவாசி சாலை, வேதாச்சலம் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வழியாக பவனி வந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar