கைலாயத்தில் சிவபெருமானை சந்தித்த குபேரர் தான் காவிரிப்பூம்பட்டினத்தில் வசிக்க விரும்புவதாக கூறினார். சிவபெருமானும் அருள் வழங்க, காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசன்- ஞானகலாம்பிகை தம்பதிக்கு மகனாக திருவெண்காடர் (பட்டினத்தார்) என்ற பெயரில் பிறந்தார். வாலிப வயதை அடைந்ததும், சிதம்பரம்- சிவகாமி தம்பதியின் மகளான சிவகலையம்மையை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்க தாமதமானது. குழந்தைப்பேறு வேண்டி, அவ்வூரிலுள்ள மருதீசரை வணங்கினர். ஒருமுறை அங்குள்ள வில்வமர நிழலில் பச்சிளங் குழந்தை அழுது கொண்டிருந்தது. சிவனே குழந்தையாக உருமாறி அங்கே இருந்தார். சிவசருமர்- சுசிலை என்ற அந்தண தம்பதியர் இத்தெய்வ குழந்தையைக் கண்டெடுத்து, குழந்தையில்லாத திருவெண்காடர் தம்பதியினரிடம் கொடுத்தனர். குழந்தைக்கு மருதவாணர் என்று பெயரிட்டனர். இளைஞரான மருதவாணர், தனது தந்தை திருவெண்காடரிடம், நான் சிவன். உங்களுக்கு குழந்தையாக இருந்தேன், எனக்கூறி மறைந்தார்.