பதிவு செய்த நாள்
14
மே
2024
03:05
மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோவில். கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் 10 நாட்களும், அததை தொடர்ந்து மூன்று நாட்கள் விடையாற்றியும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு, வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம், நேற்று காலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் பிரகலாதவரதர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பத்து நாட்களும், ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருள்வார். முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.