பதிவு செய்த நாள்
14
மே
2024
03:05
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் கிராமத்தில், தர்மசம்வர்தனி அம்பிகா உடனுறை முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், முக்தீஸ்வரருக்கும், தர்மசம்வர்தனி அம்பிகாவுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த ஆண்டு, முக்தீஸ்வரருக்கும், தர்மசம்வர்தனி அம்பிகாவுக்கும், திருக்கல்யாணத்தையொட்டி, நேற்று முன்தினம், மங்கள இசையுடன் திருமுறை பாராயணம் நடைபெற்றது. அதன்பின், சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதை த்தொடர்ந்து, 63 நாயன்மார்களுடன், பஞ்சமூர்த்திகள் கயிலாய காட்சி மற்றும் வீதியுலா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்ககான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம், பிரசாதம் வழங்கினர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் முக்தீஸ்வரர் சேவா சங்கம், பொதுமக்க்கள் செய்திருந்தனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.