Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மன் கோயில்களில் முளைப்பாரி ... திருமணத்தில் நகை பிரச்னையா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாளை நமதே! இந்த நாளும் நமதே -மகாவீரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2012
02:11

*உண்மையைக் கடைபிடிப்பவனின் வாழ்வில் எத்தனை துன்பங்கள் சூழ்ந்தாலும் மனக்கலக்கம் உண்டாகாது.
*கோபம், பேராசை, அறியாமை ஆகிய காரணங்களால் மனிதர்கள் ஒருவருக்கொருவர் துன்பம் இழைக்கின்றனர். அச்சம், பகை உணர்வில் இருந்து விடுபட்டவர்கள் எந்த உயிருக்கும் துன்பம் தர விரும்ப மாட்டார்கள்.
*கூட்டுமுயற்சியால் கிடைத்த பலனை கூட்டாளிக்கு பகிர்ந்து அளிக்காமல், சுயநலத்துடன் வாழ்பவன் நற்கதி பெற முடியாது.
*பேராசை பிடித்த மனிதன் இந்த உலகில் மட்டுமின்றி மேலுலகிலும் துன்பத்திற்கு ஆளாவது உறுதி.
*விருப்பு வெறுப்பற்றவர்களாக வாழுங்கள். பிறரால் ஏற்படும் துன்பத்தை சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக் கொள்ளுங்கள்.
* இன்பம் வந்தபோது மகிழ்ச்சியில் துள்ளாமலும், துன்பம் வந்தபோது துவண்டு வருந்தாமலும் மனதை சமநிலையில் வைக்க வேண்டும்.
*வாழ்க்கை என்னும் கடலில் இன்ப, துன்ப அலைகள் ஆர்ப்பரித்து அலைக்கழிக்கின்றன. இருந்தாலும் ஆழ்கடல் அமைதியைப் போல வாழ்விலும் அமைதியைப் பெற வழியுண்டு.
*சமுதாயத்தில் பெரும்பாலானவர்களுக்கு நன்மை தரும் வாழ்க்கை முறைகளையே ஒழுக்கநெறி என்று குறிப்பிடுகிறோம்.
*எண்ணம், சொல், செயல் மூன்றாலும் தீமைகளைச் செய்பவன் விலங்குப் பிறப்பை அடைந்து அளவில்லாத துன்பங்களைப்
பெறுவான்.
*மனிதன் அவனவன் செய்த வினைப்பயன்களை அனுபவித்தே கழிக்க வேண்டும். ஒருபிறவியில் செய்த நன்மையோ, தீமையோ மறுபிறவியிலும் அவனைத் தொடர்ந்து வரும்.
*ஒருவன் ஒருபிறவியில் செய்த தர்மத்தின் பயன், அடுத்தடுத்த பிறவியிலும் அவனுக்குத் துணையாக நின்று உயிரைக் காக்கும். நாளைக்கும்,
இன்றைக்கும் தேவையான நன்மைகளை வாரி வழங்கும்.
* இல்லற நெறியைப் பின்பற்றி வாழ்பவர்கள் அன்பு, அடக்கம், ஒழுக்கம், பொறுமை போன்ற நற்பண்புகளைப் பெற்றிருத்தல் அவசியம்.
*தாவர உணவு வகைகளை மட்டும் உண்ணுங்கள். இதனால், உடல் ஆரோக்கியம் அடைவதோடு மனதிலும் தர்மசிந்தனையும், அமைதியும்
நிலைபெற்றிருக்கும்.
*சத்தியத்தை பின்பற்றினால் எதற்கும் அச்சப்படத்தேவையில்லை. சத்தியம் இருக்குமிடத்தில் வஞ்சம், கபடம் காணாமல் போய்விடும்.
*அலைகின்ற மனதை ஒருநிலைப்படுத்த தியானம் பயில வேண்டும். தியானத்தை தொடர்ந்து பயின்று வந்தால் அற்ப எண்ணங்கள் மறைந்து மனதில் தூய எண்ணங்கள் வளரத் தொடங்கும்.
*நாவடக்கம் கொண்டவர்களே நல்ல மனிதர்கள். இவர்கள் பிறரை ஒருபோதும் பழித்துப் பேச மாட்டார்கள். பிறரைப் பற்றி குறை பேசாதவர்களே சான்றோர் ஆவர்.
*பிறரை ஏமாற்றிப் பிழைப்பது கொடிய பாவம். பிறருக்குரிய பொருளை அடுத்தவர் அறியாமல் பெற முயல்பவன் ஏழேழு பிறவிக்கும் தீங்கைத் தேடிக் கொள்கிறான்.
*மனதில் உறுதி இருந்தால் மட்டுமே ஐம்புலன்களை அடக்க முடியும். புலனடக்கம் கை வரப் பெற்றவன் மனதில் ஆசைகளுக்கு இடம் இருப்பதில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar