சிவபெருமானுக்கு ஐந்து முக்கிய வடிவங்கள் உண்டு. ஒரே இறைவன், பல வடிவங்களில் காட்சி தருவது ஏனெனில், அவரவர் மனநிலைக்குத் தக்கவாறு வடிவங்களைத் தேர்ந்தெடுத்து கொள்ளத்தான். பைரவ வடிவம் கோபமும், வேகமும் நிறைந்தது. எதிரிகளை துவம்சம் செய்வது மட்டுமே அதில் பிரதானப்படுத்தப்படுகிறது. தட்சிணாமூர்த்தி வடிவம் எதுவும் பேசாமல், ஆழ்நிலை மவுனத்தில் சாந்தமாக இருக்கிறது. பிட்சாடனர் கோலம் தாருகாவனத்து ரிஷிபத்தினிகளை கவரும் வசீகர நிலையில் உள்ளது. நடராஜ தத்துவம் தன்னை மறந்து நடனமாடும் ஆனந்த பரவச நிலையைக் குறிக்கிறது. கடவுளின் கருணைப் பிரவாகத்தைக் காட்டும் நிலையில் சோமாஸ்கந்தர் வடிவம் உள்ளது.