பழநி முருகன் கோயில் ரோப் கார் பராமரிப்பு பணிக்காக மே 30ம் தேதி நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2024 04:05
பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை, மாதாந்திர பராமரிப்பு காரணமாக மே 30ம் தேதி ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழநி முருகன் கோயில் சென்றுவர ரோப் கார், வின்ச், படிப்பாதை, யானைப்பாதை உள்ளன. ரோப் கார் சேவையில் மூன்று நிமிடத்தில் மலைக்கோயில் செல்லலாம். மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மே 30ம் தேதி ஒரு நாள் மட்டும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வின்ச், படி பாதை, யானைப்பாதை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.