பதிவு செய்த நாள்
28
மே
2024
03:05
பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 13ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் 20ம் தேதி கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும், 21ம் தேதி கம்பம் நாட்டு விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. 22ம் தேதி கொடியேற்றம் நடைபெற்று, 23ம் தேதி முதல் இன்று 28ம் தேதி வரை தினமும் காலை, 9:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவில் இன்று மடி பிச்சை எடுத்தும், அடி அளந்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். நாளை 29ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 30ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. 31ம் தேதி மாலை, 4:30 மணிக்கு இரண்டாம் நாள் தேரோட்டமும், ஜூன் 1ம் தேதி மாலை, மூன்றாம் நாள் தேரோட்டமும் நடக்கிறது.