ராமரின் நான்காவது தம்பி சத்ருக்கனர். ராமரோடு லட்சுமணர் எப்போதும் உடன்இருந்தது போல, பரதனோடு எப்போதும் துணையிருந்தவர். சத்ருக்களை வென்றவர் என்பது இவருடைய பெயரின் பொருள். ராமாயணத்தில் சத்ருக்கனன் போர்ப்பயிற்சி பெற்றாலும் எந்தப் போரிலும் ஈடுபடவில்லை. ஐம்புலன்களை அடக்கி, மனதில் உருவாகும் பகைவர்களான காமம், கோபம் முதலிய தீய குணங்களை வென்றவர். ராவணவதம் முடிந்து, ராமர் அயோத்தியில் அரியணையில் அமர்ந்தபோது, சத்ருக்கனர் வெண் சாமரம் வீசி ராம சேவையில் ஈடுபட்டார்.