சாக்கோட்டையில் தேர்த்திருவிழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2024 05:06
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயில் தேர்த்திருவிழா இன்று நடந்தது.
சாக்கோட்டை சாக்கை உய்யவந்தம்மன் கோயில் திருவிழா கடந்த ஜூன் 6ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான பால்குட திருவிழா நேற்று நடந்தது. தினமும் காலை மற்றும் இரவு அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், தீச்சட்டி, பறவைக்காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடந்தது. முன்னதாக அம்மன் தேருக்கு எழுந்தருளால் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.