சென்னை தர்ம விநாயகர், தர்மராஜா கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூன் 2024 10:06
சென்னை: முத்தியால்பேட்டை, லிங்கிச் செட்டித் தெரு பகுதியில் உள்ள தர்ம விநாயகர் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
சென்னை; முத்தியால்பேட்டை, லிங்கிச் செட்டித் தெருவில் அமைந்துள்ளது தர்மவிநாயகர் தர்மராஜா கோயில். இங்கு திரௌபதி அம்மன் பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் சிறப்பு வழிபாடு மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவில் 18 ம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 21ம் தேதி பாரிவேட்டை உற்சவமும், முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று 23ம் தேதியும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை 25ம் தேதி உற்சவ சாந்தி அபிஷேகம் மற்றும் திரௌபதி அம்மன் ஏகாந்த சேவையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தர்ம விநாயகர் மற்றும் தர்ம ராஜா திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.