ஆடி பிரம்மோற்ஸவ விழா; பல்லக்கில் பவனி வந்த வீர அழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2024 02:07
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பல்லக்கில் வீர அழகர், மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளினார்.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா இன்று 18ம் தேதி திருக்கல்யாணமும், வருகிற 21ம் தேதி தேரோட்டமும் 22ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடம் தோறும் ஆடி பிரம்மோற்ஸவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.இந்த நாட்களின் போது சுவாமி பரங்கி நாற்காலி, பல்லக்கு, குதிரை, சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இந்தாண்டுக்கான விழா கடந்த 13ம் தேதி காலை 5:00 மணியிலிருந்து 6:25 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கியது .இதனைத் தொடர்ந்து விழா நாட்களின் போது சுவாமி வீதி உலா நடைபெற்றது. இன்று மாரியம்மன் கோவில் தெருவில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் மண்டகப்படிக்கு பல்லக்கில் வீரழகர் எழுந்தருளினார்.முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று 18ம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து இரவு 7:35 மணிக்குள் நடைபெற உள்ளது. 21ம் தேதி மாலை 6:00 மணியிலிருந்து 6:30 மணிக்குள் தேரோட்டமும், 22ஆம் தேதி பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன்,அர்ச்சகர் கோபி மாதவன்(எ) முத்துச்சாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.