கூடலுார் துர்க்கை அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2024 10:07
கூடலுார்; கூடலுார் துர்க்கை அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி முதல் வாரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. வீருகண்ணம்மாள் கோயிலில் ஆடி வெள்ளி முதல் வார பூஜையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. லோயர்கேம்ப் பளியன்குடி மங்களநாயகி கண்ணகி கோயிலில் ஆடி வெள்ளி முதல் வார சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.