பதிவு செய்த நாள்
20
ஜூலை
2024
10:07
திருப்புத்தூர்; சிவகங்கை மாவட்டம் இளையாத்தங்குடியில் உள்ள 65 ஆவது பீடம் ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் அதிர்ஷ்டானத்தில் வியாழக்கிழமை விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு நடத்தினார்.
இளையாத்தங்குடியில் 65 ஆவது பீடம் ஸ்ரீ மகா தேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் (1851-1890) ஆன்மீகப் பணியாற்றி முக்தி அடைந்த நிலையில் அவரது நினைவாக அதிர்ஷ்டம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த இடத்திற்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை இரவு 9:00 மணிக்கு வருகை புரிந்தார். முதலில் அதிர்ஷ்டானத்திற்குள் நுழைந்த அவர் 45 நிமிடங்கள் தியானம் மேற்கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ராமேஸ்வரம் பயணம் மேற்கொள்ளும் நிலையில் இங்கு வருகை புரிந்ததாக கூறினார். கீழச்சிவல்பட்டி, இளையாத்தங்குடி, கீரணிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமனோர் ஆசி பெற்றுச்சென்றனர். தொடர்ந்து ஆர்.எம். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அரசுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்கு வெள்ளி குத்துவிளக்கு வழங்கி ஆசி வழங்கினார். தொடர்ந்து நித்திய கல்யாணி அம்மன் கோயில் குளத்தில் உள்ள 65 ஆவது பீடம் மகேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருவுருவு சிலையினை வழிபட்டார். முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச். ராஜா, வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், கல்வி நிலையத் தாளாளர்கள் எஸ்.எம்.பழனியப்பன், வித்தியாகிரி சுவாமிநாதன், மகரிஷி சேதுராமன், இளையாத்தங்குடி சங்கரமட நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், விசஸ்வநாதன், கார்த்தி, சுந்தரேசன், செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராமன், எஸ். புதூர் முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, ஜி. குணாளன் உள்ளிட்டோர் சுவாமிகளை வரவேற்றனர்.