புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் அமாவாசை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02செப் 2024 03:09
பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, இன்று காலை 9:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.