திருக்கோஷ்டியூரில் கண்ணாத்தாள் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2024 11:09
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் தெற்கு தெரு கண்ணாத்தாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலுக்கு கண்ணத்தாள், செல்வ விநாயகர்,முருகன்,அகில பரிபூரணி பக்த செளபாக்கியதாகினி, சக்ரவாஷினி சன்னதிகள்,முன்மண்டபம் ஆகிய திருப்பணிகள் நடந்தது. தொடர்ந்து கும்பாபிேஷகத்தை முன்னிட்டு செப்.5 காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை இரண்டாம் காலயாக பூஜை நடந்து, பூர்ணாதி தீபாராதனைக்கு பின், யாகசாலை பூஜையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி நேற்று காலை 10:00 மணி அளவில் விமான,கோபுர கலசங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு மூலவர் சன்னதியில் சிறப்பு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாட்டினை விழாக்குழு நிர்வாகிகள், இளைஞர்அணி,கிராமத்தினர் செய்தனர்.