பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவருக்கு செவ்வாய் சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2024 11:10
கோவை; பெரியநாயக்கன் பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் சந்தன காப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.