கனமழை எச்சரிக்கை; வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்தது திருப்பதி தேவஸ்தானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15அக் 2024 11:10
திருப்பதி; மழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வி.ஐ.பி., பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. அதன் எதிரொலியாக, ஆந்திராவில் வியாழக்கிழமை (அக்.17) வரை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந் நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மழை நிலவரம், தரிசனம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதன்படி, பலத்த மழை அறிவிப்பு எதிரொலியாக புதன்கிழமை (அக்.16) வரை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தேவஸ்தானம் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பக்தர்களின் நலன்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. வி.ஐ.பி., பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், அக்டோபர் 15ம் தேதி எவ்வித பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது. பக்தர்கள் அனைவரும் இந்த முடிவுக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.