திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி; கோயில் மண்டபங்களில் இடம் பிடிக்க பக்தர்கள் போட்டா போட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2024 03:11
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நாளை (நவ.2) காலை 7:00 மணிக்கு துவங்குகிறது. அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜை முடிந்து ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிவாச்சாரியார்களால் காப்பு கட்டப்படும். திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின்பு காலை 8:45 மணிக்கு மேல் விரதம் மேற்கொள் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். திருவிழா நடைபெறும் நாட்களில் கோயில் மண்டபங்களில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்வர். பெண் பக்தர்கள் அக். 31அன்று தீபாவளி கொண்டாடி முடித்து மதியம் கோயிலுக்குவந்து மண்டபங்களில் போர்வை விரித்தும், சாக் பீஸ்களால் தங்களது பெயர், ஊரின் பெயர் எழுதி இடம் பிடித்து வருகின்றனர். மதுரை, சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் கோயிலில் தங்கினர்.