பாதூர் பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2024 03:11
உளுந்தூர்பேட்டை; பாதூர் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஸ்ரீ பிரித்தியங்கரா தேவி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசையையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது. அதனையொட்டி இன்று காலை 10.30 மணியளவில் யாகம் வளர்க்கப்பட்டது. யாகத்தில் பால், தயிர், நெய், பழங்கள் ஊற்றப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் மிளகாய் வற்றல் யாகத்தில் சாற்றப்பட்டது. பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேறக் கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் சாற்றப்பட்டன. பின்னர் புடவைகள், வளையல்கள் ஆகியவையும் சாற்றப்பட்டன. அதனைத் தொடர்ந்து தீபாராதனை வழிபாடு நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் செய்து இருந்தார். இந்த பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.