Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் வாராஹி அம்மன் கோவில்களில் ... பத்மாவதி தாயார் கோவிலில் சிருங்கேரி சன்னிதானம் தரிசனம் பத்மாவதி தாயார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்; பகதர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்; பகதர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

08 நவ
2024
10:11

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி தேரோட்டம் நடந்தது.


தேரோட்டம்: காலை 8:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சட்டதேரில் எழுந்தருளினார். நவ. 3முதல் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள், கிரிவலம் சென்று கோயில் முன்பு தேர் நிலை நிறுத்தப்பட்டது. கோயில் கம்பத்தடி மண்டபத்திலுள்ள மயிலுக்கு அபிஷேகம் நடந்தது. விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதத்தை முடித்தனர். 


பாவாடை நைவேதனம்: மாலை 3:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவசம் சாத்துப்படியாகி 108 படி அரிசியினால் தயாரான தயிர் சாதம் படைக்கப்பட்டு அதன் மேல் காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை தரிசனம் நடந்தது. மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியானது. இரவு வீதி உலா நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள் பாலித்தனர்.


கேபிள் ஒயர்களால் தேர் தாமதம்: தேர் வலம் வந்த ரத வீதிகளின் குறுக்கே இருந்த மின் ஒயர்களை பணியாளர்கள் தேரோட்டத்திற்கு முன்னதாகவே தேர் செல்வதற்கு வசதியாக துண்டித்தனர். ஆனால் கேபிள் ஒயர்கள் துண்டிக்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு கேபிள் ஒயர் இருந்த பகுதியிலும் தேர் சுமார் பத்து நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, கேபிள் ஒயர்கள் துண்டிக்கப்பட்டபின்பு புறப்பட்டது. இதனால் தேர் வலம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. தேரோட்டத்தில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் மணி செல்வம், பொம்மை தேவன், சண்முகசுந்தரம், ராமையா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், தி.மு.க., தெற்கு மாவட்ட துணை செயலாளர் பாலாஜி கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; காரமடை அரங்கநாதர் கோவிலில், மார்கழி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.கோவை மாவட்டத்தில் ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பிரமாண்ட ராமர் ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஹனுமன் ஜெயந்தி விழா வரும் 30ம் தேதி கொண்டாடப்படுகிறது. நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் நடந்த மங்கள வேல் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் துாண்கள், பிரகாரங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar