பதிவு செய்த நாள்
08
நவ
2024
02:11
போடி; போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவை ஒட்டி அம்மனிடம் வேல் வாங்குதல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
போடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில், செயல் அலுவலர் சுந்தரி முன்னிலையில் நடந்து வருகிறது. தினம் தோறும் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடக்கிறது. நேற்று காலை 10:35 மணிக்கு அம்மனிடம் இருந்து வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.30 மணிக்கு மேல் சிங்கார வேலன் பழனி பாதயாத்திரை பேரவை சார்பில் நடந்த சூரசம்ஹார நிகழ்வில் சுப்பிரமணியர் சுரபத்மன், அசுரனை வேலால் சூரசம்காரம் செய்தார். காமராஜர் பஜார், தேரடி தெரு, கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி நகர்வலம் புரிந்தார். ஏற்பாடுகளை பழனி பாதயாத்திரை பேரவை குருநாதர் சுருளிவேல், தலைவர் ஜெயராம், செயலாளர் அழகர்சாமி, பொருளாளர்கள் செந்தில், குமார் உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிர மணியரின் தரிசனம் பெற்றனர்.