Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்த சஷ்டி விழா: அரோகரா, அரோகரா ... மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பூதத்தாழ்வார் திருத்தேரில் உலா மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை; தி.நகர், திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு புஷ்ப யாகம்; பக்தர்கள் மலர்கள் கொடுக்கலாம்!
எழுத்தின் அளவு:
சென்னை; தி.நகர், திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு புஷ்ப யாகம்; பக்தர்கள் மலர்கள் கொடுக்கலாம்!

பதிவு செய்த நாள்

08 நவ
2024
03:11

சென்னை; தி.நகர், திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், வெங்டேஷ்வர பெருமாளுக்கு நாளை பிற்பகல் புஷ்பயாகம் நடக்கிறது. இதையொட்டி, பக்தர்களிடம் இருந்து மலர்கள் வரவேற்கப்படுகின்றன.


திருமலை திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில், ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்திற்கு பின், உற்சவருக்கு புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. அதேமுறையில், சென்னை, தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், வெங்கடேஸ்வர பெருமாளுக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை பிற்பகல், 2:30 மணிக்கு புஷ்பயாகம் நடக்கிறது. முன்னதாக காலை, 9:00 மணிக்கு ஹோமமும், 11:00 மணிக்கு திருமஞ்சனமும் நடக்கிறது. இந்த புஷ்ப யாகத்திற்கு தேவையான துளசி, சாமந்தி, மல்லி, கனகாம்பரம், சம்பங்கி, நித்யமல்லி, ஜாதிமுல்லை, மருவு, தவனம், தாமரை, விருச்சி, மனோரஞ்சிதம், செண்பகம், ரோஜா, மகிழம், தாழம்பூ ஆகிய மலர்கள், பக்தர்களிடம் இருந்து வரவேற்கப்படுகிறது. மலர்களை வழங்க விரும்புவோர், நாளை நண்பகல் 12:00 மணிக்குள், கோவிலின் சுவர்ணம் அரங்கில் கொடுக்கலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
அன்னூர்: அருகம்பாளையம், பால பட்டாபிராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.அருகம்பாளையத்தில், ... மேலும்
 
temple news
 சென்னை: கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருநட்சத்திர நாளை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு, 1,008 ... மேலும்
 
temple news
பழநி: பழநி ரெணகாளிஅம்மன் கோயில் ஏப்.30 கும்பாபிஷேக திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு முகூர்த்த கால் ... மேலும்
 
temple news
 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று வார விடுமுறை என்பதால், சுட்டெரிக்கும் வெயிலிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar