Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருநிலம் லட்சுமி நாராயண பெருமாள் ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் திருக்கல்யாணம்; கந்த சஷ்டி விழா நிறைவு திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

08 நவ
2024
05:11

பழநி; பழநி கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம் உற்ஸவம் நடைபெற்றது.


பழநி கோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா நவ.2., துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் நவ.7., கோவிலில் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல்வாங்குதல் நடைபெற்று, பராசக்தி வேல் மலையிலிருந்து இறங்கி கிரி வீதியில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. வெற்றி விழாவிற்கு பின் கோயிலில் இரவு சம்ரோட்சன பூஜைக்கு பின் அர்த்தஜாம பூஜை நடைபெற்றது. இன்று (நவ.9.,ல்) கோயிலில் அமிர்தலிங்கம்குருக்கள், செல்வசுப்ரமணியம்குருக்கள் குழுவினர் யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்களில் உள்ள புனித நீரில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க காலை 10:00 மணிக்கு சண்முகர்,வள்ளி, தேய்வானைக்கு மாங்கல்யதாரணம், செய்து திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாண உற்ஸவம், திரளாக கலந்து கொண்ட பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடை பெற்றது. தொடர்ந்து, மாலை மாற்றுதல், திருமணகோலத்தில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாணத்திற்கு பின் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. பக்தர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலை பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தேய்வானை உடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள் கன்பத் கிராண்ட் ஹரிஹர முத்து அய்யர், நகரின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அடிவாரம் போலீசார் அன்னதானம் வழங்கினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar