Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் கோவில்களில் வேலவன் ... கரிவரதராஜ பெருமாள் கோவிலில் திருவோணம் சிறப்பு பூஜை கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

பதிவு செய்த நாள்

09 நவ
2024
08:11

கோவை; கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கந்தர்சஷ்டி விழா கடந்த நவ., 2 அன்று காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமானுக்கு 12 வகையான மூலிகை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோட்டை கரிவரதராஜ பெருமாள் மற்றும் கோனியம்மன் கோவிலிலிருந்து திருமண சீர் வரிசைகள் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு திருக்கல்யணா வைபவம் நடந்தது. மாலைமாற்றும் வைபவம், தேங்காய் உருட்டும் நிகழ்வு என்று பாரம்பரியமும், கலாசாரமும் மாறாமல் திருக்கல்யாண வைபவம் சீரும் சிறப்புமாக பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது. நிறைவாக பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து பரிமாறும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்பு பக்தர்கள் திருக்கல்யாண மொய் சமர்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தங்களது சக்திக்கேற்ற மொய்ப்பணம் சமர்பித்து நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினர். இதே போன்று சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில். ஈச்சனாரியிலுள்ள திருச்செந்தில் கோட்டத்தில் (கச்சியப்பர் மடாலயம்), குனியமுத்தூர் பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் கோவில்பாளையம் காளகாலேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் திருக்கல்யாண உற்சவங்கள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar