Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மண்டல சீசனுக்காக புல்மேடு ... கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம் கோவை கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் கோவில்களில் வேலவன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் கோவில்களில் வேலவன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 நவ
2024
08:11

திருப்பூர்; சூரசம்ஹாரத்தை தொடர்ந்து, ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, நேற்று திருக்கல்யாண உற்சவ விழா விமரிசையாக நடந்தது. ஐப்பசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து, கந்த சஷ்டிவிரதம் துவங்குகிறது. பக்தர்கள், முதல்நாளில் காப்பு அணிந்து, எவ்வித ஆகாரமும் உட்கொள்ளாமல் விரதம் மேற்கொண்டு, முருகனை வழிபடுவது வழக்கம். சூரசம்ஹாரத்தை தொடர்ந்து நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்று, விருந்து உண்டு விரதம் பூர்த்தி செய்யப்படும்.


திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், கடந்த, 2ம் தேதி காப்புக்கட்டி, கந்தசஷ்டி விழா துவங்கியது. தினசரி பூஜைகளை தொடர்ந்து, நேற்று முன்தினம், அன்னையிடம் வேல் வாங்கி வந்த முருகப்பெருமான், சூரனை வதம் செய்து, ஜெயந்தி நாதராக கோவிலுக்கு திரும்பினார். கந்தசஷ்டி விழாவின் நிறைவாக, நேற்று, திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு, 16 வகையான திரவியங்களால் மகா அபிஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மணக்கோலத்தில், தேவியருடன் எழுந்தருளிய சுப்ரமணியர், திருவீதியுலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வடை, பாயசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. 


சிவன்மலை சுப்ரமணியர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவில், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியர் கோவில், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில், அணைக்காடு செல்வ விநாயகர் கோவில், பலவஞ்சிபாளையம் காளிக்குமாரசுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்தது. விரதம் இருந்த பக்தர்கள் கங்கணம் கழற்றி, கோவில் அன்னதானத்தில் பங்கேற்று, விரதத்தை நிறைவு செய்தனர். கந்தசஷ்டி விரதம் இருந்த பக்தர்களுக்கு, மஞ்சள் சரடு, மலர்வகை, குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.


கனககிரி வேலாயுதசுவாமி: கண்டியன்கோவில் ஊராட்சி, குளத்துப்பாளையத்தில் உள்ள கனககிரி வேலாயுதசுவாமி கோவில், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம். வலதுபுறம் தண்டாயுதம், இடதுபுறம் கிளியுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். புதிதாக சூரபத்மன் உருவங்கள் செய்து, சூரசம்ஹாரத்துடன் கந்தசஷ்டி விழா திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.


திருமுருகன்பூண்டி: திருமுருகன் பூண்டி திருமுருக நாத சுவாமி கோவிலில் நேற்று காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில், வள்ளி தெய்வானை உடனமர் சண்முகநாதர் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும் அரோகரா கோஷத்தோடு சண்முகநாதரை வழிபட்டனர். பக்தர்கள் மொய்ப்பணம் எழுதுதல், பாத காணிக்கையடுத்து வெள்ளி யானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சண்முகநாதர் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பல்லடம்: பல்லடம் அடுத்த மாதப்பூரில் முத்துக்குமாரசாமி கோவிலில் நேற்று முன்தினம், கந்த சஷ்டி சூரசம்ஹார நிகழ்வு நடந்தது. மரகதாம்பிகையிடம்‌ வெற்றிவேலை பெற்றுக் கொண்டு, மயில் வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமாரசாமி, சூரனை வதம் செய்தார். தொடர்ந்து, நேற்று காலை, 5.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் துவங்கியது. ‘அரோகரா’ கோஷம் முழங்க முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, வள்ளி தெய்வானை சமேதராக கல்யாண கோலத்தில் முத்துக்குமாரசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar