அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2024 10:11
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள வள்ளி தேவ சேனா சமேத சிவ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் சந்தன காப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.