செஞ்சி: செஞ்சி அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது.செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதை முன்னிட்டு மாலை 5 மணி முதல் அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றினர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. வாணவேடிக்கை நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர். திருப்பணிக்குழுவினர் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.