பதிவு செய்த நாள்
03
அக்
2026
03:10
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் இருந்து, ஒரே நாளில், 14 வைணவ திவ்யதேச, கோவில்களை தரிசிக்கும் வகையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில், இயக்கப்படும் பஸ் சேவை, துவங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் கோட்டத்தின் மூலம், கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில், கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள திருநாங்கூர் ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேச தலங்களை, ஒரே நாளில் தரிசிக்கும் வகையிலான பஸ் சேவையை, கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் தட்சிணாமூர்த்தி, கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து பயணிகளுக்கு இனிப்பு வழங்கி, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பஸ் சேவை வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து காலை 5:00 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் இரவு 8:00 மணிக்கு கும்பகோணம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தடையும். இதற்கு பயணக்கட்டணமாக நபர் ஒன்றுக்கு, 1,350 ரூநாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கு “மொபைல் ஆப், www.tnstc.in மூலம், முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாடாளன்பெருமாள் கோவில், சீர்காழி
அண்ணன் பெருமாள் கோவில், அண்ணன்கோவில்
கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில், திருநகரி
வரதராஜபெருமாள் கோவில், திருமணிக்கூடம்
வைகுந்தநாதர் கோவில், திருநாங்கூர்
வான்புருஷோத்தமன் பெருமாள் கோவில், திருநாங்கூர்
செம்பொன்செய் பெருமாள் கோவில், திருநாங்கூர்
பள்ளிகொண்ட பெருமாள் கோவில், திருநாங்கூர்
குடமேடு கூத்தர் கோவில், திருநாங்கூர்
நாராயண பெருமாள் கோவில், மணிமாடக்கோவில், திருநாங்கூர்
பரிமள ரெங்கநாத கோவில், திருஇந்தளூர், மயிலாடுதுறை
ஸ்ரீநிவாசா பெருமாள் கோவில், சேங்கனுார்
ஸ்ரீநிவாசா பெருமாள் கோவில், நாச்சியார்கோயில்
சாரங்கபாணி கோவில், கும்பகோணம்.