திருப்பதி; உடிப்பியில் உள்ள ஸ்ரீ பண்டாரகேரி மடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ வித்யேஷதீர்த்த ஸ்ரீபாதர் இன்று திங்கள்கிழமை காலை திருமலையில் உள்ள ஸ்ரீ வாரி கோயிலுக்கு வருகை தந்தார். அவருக்கு ஸ்ரீவாரி கோயில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை TTD கூடுதல் EO சி வெங்கையா சவுத்ரி மற்றும் கோயில் குருக்கள் கோயில் மரியாதையுடன் வரவேற்று சன்னதிக்கு அழைத்துச் சென்றனர். பின் அவர் சுவாமி தரிசனம் செய்தார். இதில் கோவில் டிஇஓ லோகநாதம், பீஷ்கார் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.