Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுமுகை ஐயப்பன் கோவிலில் படிபூஜை; ... வாராகி அம்மனுக்கு பஞ்சமி  மகா அபிஷேகம்; தேங்காய் தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு வாராகி அம்மனுக்கு பஞ்சமி மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

04 ஜன
2025
03:01

கடலூர்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.


சிதம்பரம் தமிழகத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் புகழ்பெற்ற பூலோக கைலாசமாக விளங்குகின்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் வருடத்திற்கு இரண்டு முறை தேர் திருவிழா நடைபெறும். ஒன்று ஆணி திருமஞ்சனம் மற்றொன்று மார்கழி ஆருத்ரா தரிசனம். இந்த மார்கழி ஆருத்ரா தரிசனம் மாணிக்கவாசகருக்கு காட்சி தந்ததாக கூறப்படுகிறது. சிறப்பு மிக்க இந்த மார்கழி ஆருத்ரா தரிசன துவக்க விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 7 மணி அளவில்  நடராஜர் சன்னிதி உள்ள பொற்சபை நேர் எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றி விழா துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பத்து நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறும். 


தினசரி நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை களி செய்து படைக்கப்படும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் வானத்தில் சிவபெருமான் நட்சத்திரமாக தோன்றியதாகவும், மாணிக்கவாசருக்கு காட்சி கொடுத்ததாகவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது, இந்த மார்கழி ஆருத்ரா தரிசனத்தில் தினசரி மாணிக்கவாசகர் கோவிலுக்குள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நடராஜப் பெருமானுடைய சன்னதியில் வைத்து தீபார்த்தனைகள் காண்பிக்கப்படும். சிறப்பு மிக்க இந்த விழாவில் வரும் 12ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. 13ம் தேதி மாலை 3 மணி அளவில் நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜ பெருமானும், சிவகாமசுந்தரியும் நடனம் ஆடிய படியே பொதுமக்களுக்கு காட்சியளிப்பார். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில்  108 வைணவத்தலங்களில் மூன்றாவது தலமான சாரங்கபாணி சுவாமி திருக்கோவிலில், ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  உத்திராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி செம்பொற்சோதிநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை மண்டபம் அமைக்கும் பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar