மேட்டுப்பாளையம் கொங்காலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2025 11:01
மேட்டுப்பாளையம்; மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் அருகே கொங்காலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில், மோத்தேபாளையம் கிராமத்தில் கொங்காலம்மன் கோவில் உள்ளது. காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் இக்கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று அம்மன் சுவாமியை வழிபட்டனர்.