பொரசப்பட்டில் அம்மனுக்கு தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜன 2025 11:01
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொரசப்பட்டில் அம்மனுக்கு தீமிதி திருவிழா நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொரசப்பட்டில் உள்ள அம்மனுக்கு நேற்று காலை தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி கரகம் அழைத்து வரப்பட்டனர். அதன்பின் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியும் மாலை அம்மனுக்கு தீமிதி நிகழ்ச்சி நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் அலகு குத்தியும் தீச்சட்டியேந்தியும் சாமி வேடமிட்டும் தீமிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.