பதிவு செய்த நாள்
25
ஜன
2025
04:01
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வாஸ்து பூஜையுடன் கோயில் திருப்பணி வேலைகள் துவங்கின.
ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட புவனேஸ்வரி அம்மன் சமேத கைலாசநாதர் கோயில், ஆர்.எஸ். மங்கலத்தில் அமைந்துள்ளது. 2004 ல் இந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்பு, கோயில் முறையான பராமரிப்பு இல்லாததன் காரணமாக கோபுரங்கள் மற்றும் கட்டுமானங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. இந்த நிலையில், கோயில் விரிசல்களை சரி செய்து பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவஸ்தானம் மற்றும் ஹிந்துக்கள் சார்பில் திட்டமிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இன்று காலை 11:00 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து கட்டுமான பணிக்கான வாஸ்து பூஜைகள் கோயில் திருப்பணி குழு நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நிகழ்வில், திருப்பணி குழு தலைவர் கந்தசாமி, நிர்வாகிகள் மருது, சசிகுமார், அஜய்நாத், குணசேகரன், இளங்கோவன் உட்பட பல கலந்து கொண்டனர்.