திருப்பரங்குன்றம் மலை மேல் பிரியாணி கொண்டு செல்ல முயன்றோர் தடுத்து நிறுத்தம்; திருப்பி அனுப்பிய போலீசார்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2025 04:01
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை மேல் இன்று பிரியாணி கொண்டு சென்ற ஐந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்களை போலீசார் திருப்பி அனுப்பினர். கடந்த மாதம் ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆடு, சேவலுடன் திருப்பரங்குன்றம் மலை மேல் செல்லமே முன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். ஜன.18 அன்று மலை மேல் தர்காவில் ஆடு, கோழி வெட்டி சமபந்தி விருந்து கொடுக்கப் போவதாக சில முஸ்லிம் அமைப்பினர் மலையேற முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்தனர். சில நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றத்திற்கு நவாஷ்கனி எம்.பி., யுடன் வந்தவர்கள் மலை படிக்கட்டுகளில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று ஐந்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பிளாஸ்டிக், சில்வர் வாலிகளில் பிரியாணியுடன் மலை மேல் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர்.