தை அமாவாசை; திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி.. பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2025 10:01
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில், புஷ்ய மண்டபடித்துறையில், ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கள் முன்னோர் நினைவாக தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்டி இன்று அதிகாலை தை அமாவாசையையொட்டி, புஷ்ய மண்டப படித்துறை, காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து, புனித நீராடி ஐயாறப்பரை வழிபட்டனர். இதனால் திருவையாறு காவிரி ஆறு புஷ்ய மண்டப படித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர் அறம்வளர்த்தநாயகியுடன் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆறு புஷ்யமண்டப படித்துறையில் தீர்த்தவாரி நடைபெற்றது. தீர்த்தவாரியில் அஸ்திதேவருக்கு பலவகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.