திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2025 10:01
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத் திருவிழா கொடியேற்றத் துடன் இன்று தொடங்கியது.விழாவில் பக்தர்கள் ஏராளமானோர் ரபங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்,
முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் 10 நாட்கள் தெப் பத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டு தெப்பத்திருவிழா இன்று காலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 7ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை தங்க சப்பரத்திலும், இரவு பூதவாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக 6ம் தேதி தைக்கார்த்திகை தினத்தில் தெப்பக்குளத்தில் தெப்பம் முட் டுத்தள்ளுதல் நிகழ்வும், தொடர்ந்து 16 கால்மண்டபம் வளாகத்தில் இருந்து நகரின் முக்கிய ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் 7ம்தேதி ஜி.எஸ்.டி ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. அன்று காலை தெப்ப மிதவையில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளி தெப்பகுளத்தை வலம் வந்து அருள்பாலிக்கிறார்.தொடர்ந்து அன்று மாலை தெப்பக்குளத்தில் மைய மண்டபத்தில் பத்தி உலா நிகழ்ச்சியும், தொடர்ந்து மின்னொளியில் மீண்டும் தெப்ப மிதவையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தெப்பக்குளத்தை வலம் வந்து அருள்பாலிக் உள்ளார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 7ம் தேதி இரவு 8 மணியளவில் சொக்கநாதர் கோவில் முன்பு சூரசம்காரம் நடைபெறுகிறது . விழா ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது.