மேட்டுப்பாளையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜன 2025 11:01
மேட்டுப்பாளையம்; தை அமாவாசை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
இதுகுறித்து அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தை நிர்வகிக்கும் தலைவர் ஆறுமுகம், செயலர் சுகுமார் ஆகியோர் கூறுகையில்; தை அமாவாசை இந்த ஆண்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது இது மௌனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவதாகவும் ஆகவே இந்த விசேஷ அமாவாசை தினத்தில் இங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் புரோகிதம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திதி கொடுக்க வரும் பொது மக்களுக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன குறிப்பாக குடிநீர், பிஸ்கட், டீ, மற்றும் அன்னதானம் ஆகியவை இலவச மாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 4:00 மணி முதல் மாலை 4 மணி வரை புரோகிதம் நடைபெறும், நந்தவனத்தை ஒட்டி செல்லும் பவானி ஆற்றில் குளிப்பதற்கும் போதுமான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.