Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாடுதுறை பூம்புகாரில் தை அமாவாசை ... மேட்டுப்பாளையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு மேட்டுப்பாளையத்தில் ஆயிரக்கணக்கான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா கும்பமேளா; மவுனி அமாவாசையில் அமிர்த ஸ்நானம் செய்ய குவிந்த 8 கோடி பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகா கும்பமேளா; மவுனி அமாவாசையில் அமிர்த ஸ்நானம் செய்ய குவிந்த 8 கோடி பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
11:01

பிரயாக்ராஜ்; இன்று மவுனி அமாவாசை என்பதால், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் அமிர்த ஸ்நானம் செய்ய 8 கோடி பக்தர்கள் குவிந்துள்ளனர்.


உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கின்றன. இந்த இடத்தில், ஆண்டுதோறும் ‘மகாமேளா’ புனித நீராடுதல் நடக்கிறது. இந்த ஆண்டு நிகழ்வானது, 12 பூரண கும்ப மேளாவுக்கு பிறகு, அதாவது, 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மஹா கும்பமேளா ஆகும். திரிவேணி சங்கமத்தில், இம்மாதம், 13ல் துவங்கிய மஹா கும்பமேளா, பிப்., 26ல் நிறைவடைகிறது. 45 நாட்களில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மஹா கும்ப மேளாவில் புனித நீராடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. நாடு முழுதும் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 


கும்பமேளா துவங்கியதில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மவுனி அமாவாசையை முன்னிட்டு, மகா கும்பமேளாவின் இரண்டாவது அமிர்த ஸ்நானம் நடைபெற்றது. இந்த நீராடல், மகா கும்பமேளா திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். விழாவை முன்னிட்டு இன்று இது வரை  8 கோடி பக்தர்கள் குவிந்துள்ளனர். இன்று ஒரே நாளில், 10 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. புனித நீராடும் மக்களின் உயிர், உடைமைகள் போன்றவற்றுக்கு, உத்தர பிரதேச அரசும், மத்திய அரசும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன. மொத்தம், 60,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar