சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் இருந்து மடப்புரம் கோயிலுக்கு 41வது ஆண்டாக பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர். இப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் மடப்புரம் கோயிலுக்கு பாதயாத்திரை செல்வது வழக்கம். நேற்று 41வது ஆண்டாக 200க்கும் மேற்பட்டவர்கள் சிங்கம்புணரி முக்கந்தர் தெரு சுயம்பு பத்திரகாளியம்மன் கோயிலில் குருசாமி சண்முகவேல் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்திய பிறகு யாத்திரையாக புறப்பட்டு சென்றனர். மேலூர், திருவாதவூர், பூவந்தி வழியாக சென்று, இன்று மடப்புரம் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.