Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் கோயிலுக்கு பக்தர்கள் ... திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பிப்.3ல் கும்பாபிஷேகம்; காவிரியில் இருந்து புனித நீர் திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடினர்

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
01:01

தூத்துக்குடி: தை அமாவாசை தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஏரல், கடற்கரை பகுதியில் பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, புனித நீராடினர். தை அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடுவது வழக்கம். இதன் படி திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து விட்டு கடலில் புனித நீராடினர். பின் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். காலை அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.


ஏரல்: ஏரலில் உள்ள சேர்மன் அருணாச்சல சுவாமி கோயிலில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இருந்து வந்த பக்தர்கள் திரண்டனர். கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,அலங்காரம், தீபாரதணை நடந்தது. தாமிரபரணி நதிக்கரையில் பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர். தூத்துக்குடி: தூத்துக்குடியில் கடற்கரை பகுதி, துறைமுக பார்க் பகுதி, தாமிரபரணி ஆற்று கரையோர்களில் பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடந்ததால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar