Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூரில் தை அமாவாசை; ... சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு; திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் சதுரகிரியில் தை அமாவாசை வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளியங்கிரி மலைக்கு பிப்., 1 முதல் செல்லலாம் ! பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வெள்ளியங்கிரி மலைக்கு பிப்., 1 முதல் செல்லலாம் ! பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
03:01

கோவை; மகா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலைக்கு பிப்., 1 முதல் பக்தர்கள் செல்லலாம், என, வனத்துறை அறிவித்துள்ளது. வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல கடந்த ஆண்டுகளில், மார்ச் முதல், மே வரை வனத்துறை அனுமதி வழங்கி வந்தது. கடந்தாண்டு, தரிசனத்துக்காக பிப்., 1 முதல் அனுமதிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினர் மறுத்தனர். பக்தர்கள் உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர். பக்தர்களை அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல, பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. வரும், பிப்., 1ம் தேதி முதல் மே மாத இறுதி வரை, பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி, பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல, பிப்., 1 முதல் மே இறுதி வரை அனுமதி அளிக்கப்படுகிறது. மலைப்பாதை பல இடங்களில் செங்குத்தாக அமைந்துள்ளதால், ஆரோக்கியமான உடல் நலம் உள்ளவர்கள் மட்டும் சென்று வர, கேட்டு கொள்ளப்படுகிறது. வனத்துறை களப்பணியாளர்கள், உள்ளூர் சூழல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து, பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் குறித்து பரிசோதிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள், சிகரெட், பீடி போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம். குப்பைகளை வனப் பகுதியில் வீச வேண்டாம். இவ்வாறு, கூறினார்.  – நமது நிருபர் –

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar