Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை அமாவாசை; அம்மன் கோவில்களில் ... சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை சித்தலூர் பெரியநாயகி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பட்டம் செழிக்க சிறப்பு வழிபாடு; திருமூர்த்திமலையில் திரண்ட பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தைப்பட்டம் செழிக்க சிறப்பு வழிபாடு; திருமூர்த்திமலையில் திரண்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
05:01

உடுமலை; தை அமாவாசையை முன்னிட்டு, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, ரேக்ளா வண்டிகளில் பயணித்து, தைப்பட்டம் செழிக்க, மும்மூர்த்திகளை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே திருமூர்த்திமலையில், பிரம்மா, சிவன், விஷ்ணு என, மும்மூர்த்திகள் ஒருங்கே அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், ஆடி மற்றும் தை அமாவாசையன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் பங்கேற்பர். இந்தாண்டு, தைப்பட்டம் செழிக்க, நேற்று முன்தினம் முதலே ரேக்ளா வண்டிகளில், திருமூர்த்திமலையை நோக்கி பக்தர்கள் பயணித்தனர். இரவு முழுவதும் அங்கேயே தங்கி, அதிகாலை முதல், அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு அலங்கார பூஜைகளில், தைப்பட்டம் செழிக்க வழிபாடு செய்தனர். ரேக்ளா வண்டிகளின் அணிவகுப்பால், திருமூர்த்திமலை ரோடு முழுவதும் திருவிழா கோலமாக காட்சியளித்தது. மேலும், கோவில் அருகிலுள்ள, பாலாற்றின் கரையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். உடுமலையில் இருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூறுகையில், ‘ஆடி மற்றும் தைப்பட்டம் செழிக்க, திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், வழிபாடு செய்வதை பாரம்பரியமாக பின்பற்றுகிறோம். ரேக்ளா பந்தயத்துக்கு தயார்படுத்தும் காளைகளையும், வண்டிகளில் பூட்டி, கோவிலுக்கு அழைத்து வந்து, பூஜை செய்கிறோம்,’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவில் ‘சக்தி’ கொலுவில் ஆறாம் நாளான இன்று, மீனாட்சி அம்மனுக்கு ஏகதின ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழாவின் சிகர ... மேலும்
 
temple news
திருமலை:  மழைத் தூறலுக்கு மத்தியிலும், ‘கோவிந்தா... கோவிந்தா...’ என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, ... மேலும்
 
temple news
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மிகப்பெரிய திருவிழாவான துர்கா பூஜை, மகா சஷ்டி நாளான வெள்ளிக்கிழமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar