Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தை அமாவாசை; சேதுக்கரையில் குவிந்த ... தைப்பட்டம் செழிக்க சிறப்பு வழிபாடு; திருமூர்த்திமலையில் திரண்ட பக்தர்கள் தைப்பட்டம் செழிக்க சிறப்பு வழிபாடு; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தை அமாவாசை; அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
தை அமாவாசை; அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
05:01

மேட்டுப்பாளையம்; தை அமாவாசை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, விசேஷம் மற்றும் அமாவாசை நாட்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும் வந்து செல்கின்றனர். இன்று தை அமாவாசை முன்னிட்டு கோவில் நடை, காலை,5:00 மணிக்கு திறந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மன் சுவாமியை வழிபட்டனர். பின்பு கொடிமரம் அருகேயுள்ள மேடையில் தீபம் ஏற்றி, சுவாமியையும், கோவிலுக்கு வெளியே உள்ள பக்காசூரன் சுவாமியையும் வழிபட்டனர். மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில் குண்டத்து காளியா தேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு பவானி ஆற்றின் கரையோரம் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரன், சிவலிங்கம், கங்காதேவி, முருகன், கால பைரவர், விஷ்ணு, துர்க்கை ஆகிய சுவாமி சிலைகளுக்கு, அபிஷேகம், அலங்கார பூஜை செய்யப்பட்டது. பின்பு குண்டத்து காளியா தேவி அம்மனுக்கு, 16 வகை வாசனையை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. கோவில் எதிரே உள்ள விநாயகர், காளிதேவி, நவகிரக சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பூஜைகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் ஆகியோர் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம் நகரில் அம்மன் கோவில்களில் தை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar