Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னசேலத்தில் வராஹி அம்மனுக்கு ... புதுச்சேரி கடற்கரையில் தை அமாவாசை தீர்த்தவாரி; பக்தர்கள் சுவாமி தரிசனம் புதுச்சேரி கடற்கரையில் தை அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதர்வண பத்ரகாளி பீடத்தில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அதர்வண பத்ரகாளி பீடத்தில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

29 ஜன
2025
05:01

பல்லடம்; சுமங்கலி பெண்களின் மாங்கல்யத்தில் அன்னை நாராயணீ குடி கொண்டிருக்கிறாள் என, பல்லடம் அருகே நடந்த தை அமாவாசை வழிபாட்டில், பக்தர்களுக்கு ஆசியுரை வழங்கப்பட்டது.


பல்லடத்தை அடுத்த, வெங்கிட்டாபுரம் ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பீடத்தில், தை அமாவாசை சிறப்பு வழிபாடு இன்று நடந்தது. சிறப்பு யாகத்தை துவக்கி வைத்து அதர்வண பத்ரகாளி பீடாதிபதி தத்தகிரி சுவாமிகள் பேசுகையில், தர்மத்துக்கு விரோதம் இல்லாமல் நாம் செய்யும் காரியங்கள் அனைத்துக்கும் கடவுள் உறுதுணையாக இருப்பார். அதுமட்டுமின்றி, அனைத்து தெய்வங்களின் அருட்கடாட்சமும்‌ நமக்கு கிடைக்கும். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களுக்கும் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்த உடலில் இருந்து உயிர் பிரிந்து விட்டால் உடலுக்கு மதிப்பில்லை. எனவே, உயிர் வாழும் வரை இந்த உடல் நன்றாக இருக்க வேண்டும். உலகைக் காக்கும் அன்னையான பராசக்தி இவற்றில் இருந்து நம்மை காப்பாள். கோவிலில் பூஜித்து வழங்கப்படும் தாயத்துகளை, திருமணமான பெண்கள் தாலி கொடியுடனும், மற்ற அனைவரும் இடுப்பிலும் கட்ட வேண்டும். சிவனுக்கே அருள் புரிந்தவள் அன்னை பராசக்தி. சுமங்கலி பெண்களின் மாங்கல்யத்தில் நாராயணீ குடி கொண்டு இருக்கிறாள். அனைத்து தெய்வங்களுக்கும், 108 நாமாவளி என்றால், பிரித்திங்கரா தேவிக்கு மட்டும், 110 நாமாவளி சொல்லப்படுகிறது. எத்தனையோ வேத சாஸ்திரங்கள் நமக்காக வழிவகுக்கப்பட்டுள்ளன. ஹிந்து மதத்தில் மட்டுமே முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். நாம் மறைந்தாலும், நாம் செய்த தெய்வ வழிபாடுகள் நம்மை நற்கதி அடையச் செய்யும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, தை அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகமும் இதை தொடர்ந்து, அலகாபாத், ராமேஸ்வரம் புனித தீர்த்தங்களால் பிரித்திங்கரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. தங்க கவச அலங்காரத்தில் பிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar